மரியா ஷரபோவா விலகல்

பிரஞ்ச் ஓபன் டென்னில் போட்டி  இம்மாதம் 26ம் தேி முதல் ஜூன் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முன்னணி வீராங்கனை, முன்னாள் பிரஞ்ச் ஓபன் சாம்பியானான மரியா ஷரபோவா பங்கேற்பதாக இருந்தது. போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வலது தோள்பட்டை காயம் காரணமாக விலகுவதாக  மரியா ஷரபோவா அறிவித்துள்ளார். இந்த பிரச்னை காரணமாக ஜனவரி மாதம் நடைப்பெற்ற  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் போட்டியில் இருந்து  எந்தப் போட்டியிலும் விளையாடாமல் இருந்தார். காயத்தில் இருந்து மீண்டதால்  மீண்டும் விளையாட திட்டமிட்டிருந்ததார். ஆனால் மீண்டும் காயம், வலி  ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகியுள்ளார். உலக தர வரிசையில் ஒரு காலத்தில் முதல் இடத்தில் இருந்த மரியா தொடர்ந்து விளையாடததால் இப்ேபாது 35வது இடத்தில் இருக்கிறார்.

Related Stories: