×

சிலை உடைக்கப்பட்ட விவகாரம்: பணம் வேண்டாம் மோடி ஜீ! பாரம்பரியத்தை திருப்பித்தர முடியுமா?....... மம்தா தடாலடி

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொடுங்கள் இல்லையெனில் சிறைக்கு செல்வீர் என பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று மதுராபூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,  சீர்திருத்தவாதி வித்யாசாகரின் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பாரம்பரியத்தை, பிரதமரால் திருப்பித்தர முடியுமா?.

கொல்கத்தாவில் அமித்ஷாவின் சாலை பேரணி நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கொடுக்க வேண்டும். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டற்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் எனக் கூறும் பிரதமர் மோடி, அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவரை நான் சிறையில் தள்ளுவேன். எதற்கும் நான் பயப்பட மாட்டேன் என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறினார். நேற்று முன்தினம் மேற்குவங்கத்தில் பாஜக தேசிய தலைவர் பேரணி நடத்திய போது பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.


Tags : Modi ,Mamta Dhalaladi , Bengal, statue, heritage,
× RELATED சொல்லிட்டாங்க…