×

ஓசூர் அருகே குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள 13 காட்டு யானைகள்: ரூ.2 லட்சம் மதிப்பிலான வாழைகள் நாசம்

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 13 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகளை நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சாணமாவு வனத்தில் ஒரு குட்டியுடன் வெளியேறியுள்ள 12 யானைகள் ஒன்னல்வாடி கிராமத்தில் முகாமிட்டுள்ளன. அங்கு வேங்கடசாமி என்பவற்றின் வாழை தோட்டத்தில் புகுத்த இந்த யானை கூட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகளை நாசம் செய்துள்ளன. இந்த யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து பேசிய விவசாயி ஒருவர், ஆண்டுதோறும் விளைவித்த வாழைகளை யானைகள் நாசம் செய்வதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதுவரை யானைகள் தாக்கியதில்  20 முதல் 30 நபர்கள் இறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆதலால் மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சேதமான வாழைகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை, யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுக்க மின்வேலிகள் அமைக்க வேண்டும் என்பது ஒன்னல்வாடி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




Tags : Hosur ,Hoshiarpur , Hosur,13 wild elephants,Banana
× RELATED ஓசூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ரத்து