×

ரசிகர்களின் வாழ்த்து மழையால் நெகிழ்ந்த வாட்சன்...... நன்றி தெரிவித்து வீடியோ வெளியீடு

சிட்னி: கடந்த சில தினங்களாக ரசிகர்கள் அளித்த அளவில்லா அன்புக்கு வாட்சன் நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில், முழங்காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது, ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். அந்த காயத்தால் அவரது முழங்காலில் 6 தையல் போடப்பட்டுள்ளது. தனக்கு காயம் ஏற்பட்டதை வெளியே சொல்லாமல் வெற்றிக்காக வாட்சன் போராடிய உண்மை வெளியில் தெரியவர, தோற்றாலும் பரவாயில்லை என ரசிகர்கள் அவரை கொண்டாடித்தீர்த்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த சில தினங்களாக ரசிகர்கள் அளித்த அன்புக்கு நன்றி. மும்பை அணியுடனான ஐபிஎல் இறுதிபோட்டியில் நூலிழையில் வெற்றியை தவறவிட்டோம். இருப்பினும் அது அருமையான போட்டியாக அமைந்தது. அடுத்த சீசனில் இன்னும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற ஆர்வமாக உள்ளேன்.  மீண்டும் அனைவருக்கும் நன்றி, விசில் போடு என்று கூறியுள்ளார்.

Tags : Watson ,fans , IPL 2019, Shane Watson, CSK,
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...