×

பெரியார், வித்யாசாகர் சிலைகளை சேதப்படுத்துவதென பாஜக ஒரே நடைமுறையை பின்பற்றுகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : மேற்குவங்கத்தில் பிரசாரத்தை முன்கூட்டியே நிறுத்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற தேர்தல் பரப்புரை பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் விவேகனந்தா கல்லூரி வளாகத்தில் இருந்த 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான சந்திர வித்யாசகரின் சிலை உடைக்கப்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து மேற்கு வங்கத்தில் இன்று இரவு 10 மணியோடு தேர்தல் பரப்புரையை முடித்துக்கொள்ள வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதிமுறையும், ஆளும் கட்சிக்கு மற்றொரு விதியையும் கடைப்பிடிப்பதாகவும், பாரபட்சமாக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சிலை உடைப்பதையே பாரதிய ஜனதா கட்சி வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தமிழகத்தில் பெரியார் சிலையை உடைத்த பாஜகவினர் மேற்கு வங்கத்தில் வித்யாசகர் சிலையை உடைத்துள்ளனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரியார் சிலை, வித்யாசாகர் சிலையை சேதப்படுத்துவது என பாஜக ஒரே நடைமுறையை பின்பற்றுகிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : BJP ,Periyar ,Vidyasagar ,MK Stalin ,idols , Periyar Statue, Vidyasagar Statue, BJP, MK Stalin
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு