×

பைக்கை விடுவிக்க லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை (35). தனியார் கட்டுமான நிறுவன சூபர்வைசர். கடந்த 2018 நவம்பர் 30ம் தேதி, கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தங்கதுரை மேற்பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த வளசரவாக்கம் டிராபிக் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் (52) என்பவர், போக்குவரத்துக்கு இடையூறாக வேலை செய்வதாக கூறி, கால்வாய் அமைக்கும் பணியை நிறுத்தினார். மேலும், சூபர்வைசர் தங்கதுரையின் பைக்கை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.இதுபற்றி காவல்நிலையம் சென்று தங்கதுரை கேட்டபோது, பைக்கை விடுவிக்க வேண்டுமானால், 10 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத தங்கதுரை,  சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி தங்கதுரை, 10 ஆயிரத்தை ஆற்காடு – வளசரவாக்கம் சாலையில் இருந்த இன்ஸ்பெக்டர் அய்யப்பனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.இந்த வழக்கு திருவள்ளூர் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என இன்ஸ்பெக்டர் அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த முதன்மை குற்றவியல் நீதிபதி ரஜினி, பைக்கை விடுவிக்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அய்யப்பனுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்….

The post பைக்கை விடுவிக்க லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Chengalpaddu ,Chennai ,Saligramam ,Dangadurai ,Dinakaran ,
× RELATED அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும்:...