×

பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டாகியும் ஆர்.வி நகரில் திறக்கப்படாத ரேஷன் கடை

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை ஆர்.விநகரில் பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் புதிய ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் போராட்டம் நடத்த குடியிருப்போர் நலச்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசன்நகர் குடியிருப்போர் நலச்சங்க மகாசபை கூட்டம் நடந்தது. தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ராஜேந்திரன், ஆசிரியர் கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் காளிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்குடி- திருவாரூர் அகல ரயில் பாதையில் விரைவு ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் புதிய அகல ரயில் பாதை திட்டத்தை உடனே துவங்க வேண்டும். சீனிவாசன்நகர் பகுதி பொதுமக்கள் அண்ணாநகர் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். தூரத்தில் உள்ள அண்ணாநகர் ரேஷன் கடையிலிருந்து சீனிவாசன்நகர் ரேஷன் கார்டுகளை பிரித்து ஆர்.வி. நகரில் திறப்பு விழா முடிந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே ஆர்.வி நகர் புதிய ரேஷன் கடையோடு சேர்த்து கடையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி அறவழி போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : rush ,ration shop , Pattukottai, ration shop
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்