×

நினைவுகளின் சங்கமம்... 25 ஆண்டுகளுக்குபின் நேரில் சந்தித்த குடும்பங்கள்

மஞ்சூர்: மஞ்சூர் அருகே 25 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்த குடும்பங்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மஞ்சூர் அருகே உள்ளது கொலக்கம்பை முசாபுரி. இப்பகுதியில் உள்ள இளந்தென்றல் நற்பணி மன்றத்தின் சார்பில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் முசாபுரி பகுதியில் வசித்து பல்வேறு காரணங்களால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது வெளியூர்களில் வசித்து வரும் குடும்பங்களை ஒன்று சேர்த்து மக்கள் சந்திப்பு விழா நடத்த முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சமூக வலை தளங்கள் உள்பட பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டு நட்பை புதுப்புத்தனர். இதைத்தொடர்ந்து பிரிந்து சென்ற அனைவரும் தங்கள் வசித்த கிராமத்தில் மீண்டும் நேரில் சந்திக்க முடிவு செய்து அதற்காக மக்கள் சந்திப்பு விழா நடத்த தீர்மானித்தார்கள். இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் முசாபுரி கிராம மைதானத்தில் மக்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இதில் அரசு, தனியார் துறைகளில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள், பணியிட மாறுதலாகி சென்றவர்கள், குடும்ப சூழ்நிலையால் இடம் பெயர்ந்து சென்றவர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கோவை, ஈரோடு, சேலம், சென்னை, தொடர்ந்து அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து கொன்டதோடு 25 ஆண்டுகால நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் விழாவை முன்னிட்டு வயதான மூத்த குடிமகன்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

குழந்தைகள், பெண்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவின் முடிவில் பங்கேற்ற பலரும் ஒருவருக்கொருவர் தங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண்களை பரிமாறி பிரியாவிடை பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளந்தென்றல் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

Tags : Families , Family of memories, families
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...