×

சமயபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழக கோயில்களில் முறையாக வசூல் செய்யப்படுமா?

முருகபெருமானின் ஆறுபடை வீடுகளில் பழனி, திருச்செந்தூர் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இதில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருக பெருமானின் அருள் வேண்டி வருகின்றனர். அப்படி வருகை தரும் பக்தர்கள் மனநிலைவோடு செல்கிறார்களா என்றால் இல்லை.

பழனி பாலதண்டாயுடபாணி திருக்கோவில் முதல் திருச்செந்தூர் சுப்பரமணிய சுவாமி திருக்கோவில்களில் தொடர்ந்து நடந்து வரும் சிறப்பு தரிசன முறைகேடு பாதை யாத்திரையாக வந்தாலும் திருச்செந்தூர் முருகன் முகம் காண கள்ளத் தனமாக தான் கட்டணம் செலுத்த வேண்டும். இடைத்தரகராக செயல்படும் சில ஆசாமிகளின் சித்து வேலை தொடர்ந்து அறங் கேறிய வண்ணம் உள்ளது. ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்ற சொல்லை இந்த திருக்கோவிலில் பணியாற்றும் ஆசாமிகளிடமும், ஊழியர்களிடமும் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பக்தர்கள் பாதை யாத்திரையாக வந்தாலும், பக்தி நெறியோடு வந்தாலும் நபர் ஒருவர் ரூ.500 கொடுத்தால் ஆசாமிகள் சாமிக்கு அருகாமையில், அவர்களை அமர வைப்பார்கள். குடும்பத்தோடு தரிசனத்துக்கு வந்தால் ஒரு நபருக்கு 200 முதல் 300 வீதம் ஆசாமியிடம் கொடுக்கப்பட்டால் சிறப்பு தரிசனம் கிடைக்கும். முருக பெருமானுக்கு தூபம் தீபம் காட்ட கோவில் முன்வாசலில் காத்து இருந்து அழைத்து செல்லும் அர்ச்சகர்கள் ஏராளம். கோவில் தரிசனத்துக்கு செல்லும் பக்தர் கள் மேல் சட்டை அணியக்கூடாது என்ற விதி இருந்தாலும், சட்டை பையில் அதிக மாக கரண்சி நோட்டு இருக்க வேண்டும் என்பது, கோவிலில் இருக்கின்ற ஆசாமி கள் எதிர்பாப்பு.

பரம பக்தர்கள், முருகனை பணம் இல்லாத காரணத்தால் அருகில் இருந்து பார்க்க முடியாமல் தொலைவில் நின்று தரிசனம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழக திருக்கோவிலகளில் கட்டண தரிசனம் வசூல் செய்து வருகிறது.ஆனால் இந்த திருக்கோவிலில் மட்டும் வசூல் செய்யப் படும் பொறுப்பு அர்ச்சகரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. கோவிலுக்கு வெளியிலும், உள்ளும் பேரம்பேசி தனது இஷ்டத்திற்கு வசூல் செய் கிறார்கள், என்ற புகார் பலமுறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும், கோவில் நிர்வாகம் ஏன் கண்டு கொள்வதில்லை.ஆசாமிகளின் வசூல் வேட்டையில் அதிகாரி களுக்கும் பங்கு வழங்கப்படுவதால் கண்டு கொள்ளவில்லையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயர்நீதிமன்ற சிறப்பு தரிசனம் கட்ட வசூல் தொடர்பாக சம்மந்தப்பட்ட திருக் கோவில் அதிகாரிகளுக்கு பல உத்தரவை பிறப்பித்திருந்தாலும், அந்த உத்தரவை ஏன் நடை முறை படுத்தவில்லை. கோவிலில், அளவுக்கதிமான அர்ச்சகர்களை கோவில் நிர்வாகம் ஏன் அனுமதிக்கிறது. இங்கு பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கோவில் வருவாய் உயர்வுக்கு பாடுபடுகிறார்களா அல்லது கோவிலில் பணியாற்றும் ஆசாமி தரும் மாமுல் பணத்திற்காக வருவாய் இழப்புக்கு துணை போகிறார்களா என்பது இங்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தெரியும். திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் தரிசன கட்டணம் 90 சதவீதம் அங்கு பணியா ற்றும் ஆசாமியிடம் செல்கிறது.இதுபோன்ற முறைகேடான வசூல், பக்தர்கள் இடத் தில் இருக்கும் பக்தி நம்பிக்கையை சீர்குலைக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் வாசு கூறுகை யில், தமிழக இந்து சமய அறநிலைத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களுக்கு தரிசனத்திற்கு வரும் வெளிநாட்டு பயனிகளிடம் அதிகாரிகளுக்கும், ஆண்டவனுக்கும் இடைத்தரகராக செயல்படும் ஆசாமிகளும், இதற்கு துணைப் போகும் ஊழியர்களையும், அப்புறப்படுத்தி துணை ராணுவப்படையிடமோ அல்லது எல்லை பாதுகாப்பு படையினரிடமோ கட்டண வசூல் செய்யும் பொறு ப்பை, பாதுகாப்பையும் ஒப்படைத்தால் சிறப்பு தரிசன கட்டணம் முறையாக வசூல் செய்யப்படும். தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கோவிலை சுற்றி வரும் பகல் கொள்ளையர்கள் அடியோடு ஒழிக்கப்படுவர். தமிழக த்தில் பெரிய திருக்கோவில்களில் இதுபோன்ற கட்டண கொள்ளை தடுக்கலாம், வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எக்காலம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமப்புற திருக்கோவில்களில், தீபம் ஏற்றகூட வழியில்லாத நிலையில் அங்கு பணியாற்றும் பூசாரிகள் வறுமை ஒன்றே வருமானமாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். முருகனின் ஆறுபடை வீடுகளான திருச்செந்துார், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, ராமேஸ்வரம், சமயபுரம், ஸ்ரீரங்கம், தஞ்சை பெரியகோயில் மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் தனிக்கவனம் செலுத்தி வருவாய் ஏய்ப்பைத் தடுக்க உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும். இது தொடர் பாக தமிழக இந்து சமய அறநிலைய த்துறை ஆணையருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Samurdham ,temples ,Srirangam ,Tamilnadu , Samayapuram, Srirangam, temple
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு