×

கேரளாவில் பருவமழை ஜூன் 6ல் தொடங்கும்

புதுடெல்லி: ‘இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை, கேரளாவில் 5 நாள் தாமதமாக, ஜூன் 6ம் தேதி தொடங்கும்,’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்தாண்டு, பருவமழை ஜூன் 4ம் தேதி தொடங்கும் என தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமேட் தெரிவித்திருந்தது. தேசிய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த ஆண்டு பருவமழை தாமதமாக துவங்கும்.

கேரளாவில் ஜூன் 6ம் தேதிக்கு பிறகு தென்மேற்கு பருவமழை துவங்கும். இதில் 4 நாட்கள் முன் பின் இருக்கலாம். அந்தமான் நிகோபர் தென் பகுதி, நிக்கோபர் தீவு மற்றும் வங்கக்கடல் தென் கிழக்கு பகுதியில் முன்கூட்டியே மே 18 - 19 தேதிகளில் தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது’ என கூறியுள்ளது. ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவ மழைக்காலம் 4 மாதங்களுக்கு நீடிக்கும். கடந்த ஆண்டு மே 29ம் முன்கூட்டியே பருவமழை தொடங்கினாலும், குறைவாக மழை பெய்தது.

Tags : Monsoon ,Kerala , Kerala, Monsoon, starts on June 6
× RELATED கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை