×

வெஸ்ட் இண்டீஸ், இலங்கையுடன் மோதல் இந்தியா ‘ஏ’ அணி அறிவிப்பு: விருத்திமான் சாஹா தேர்வு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுடன் 4 நாள் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ள இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏ அணி இந்த மாத இறுதியில் இந்தியா வந்து 2 டெஸ்ட் (4 நாள் ஆட்டம்), 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் ஹூப்ளி, பெல்காமில் நடைபெற உள்ளன.

இத்தொடர் மே 25ம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்தியா ஏ அணி 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டியில் (4 நாள் ஆட்டம்) விளையாட உள்ளது (ஜூலை 11 - ஆகஸ்ட் 9). இந்த தொடர்களுக்கான இந்தியா ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை ஏ டெஸ்ட் தொடர்: பிரையங்க் பாஞ்ச்சால் (கேப்டன்), ஈஸ்வரன், அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புயி, சித்தேஷ் லாட், ரிங்கு சிங், ஷிவம் துபே, கே.எஸ்.பரத் (கீப்பர்), ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், சர்வதே, சந்தீப் வாரியர், அங்கித் ராஜ்பூத், இஷான் போரெல். இலங்கை ஏ ஒருநாள் தொடர்: இஷான் கிஷன் (கேப்டன்/கீப்பர்), அன்மோல்பிரீத், ரித்துராஜ் கெயிக்வாட், தீபக் ஹூடா, ரிக்கி புயி, ஷுப்மான் கில், ஷிவம் துபே, ஷ்ரேயாஸ் கோபால், வாஷிங்டன் சுந்தர், மயாங்க் மார்கண்டே, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் வாரியர், இஷான் போரெல், பிரஷாந்த் சோப்ரா.

வெஸ்ட் இண்டீஸ் ஏ ஒருநாள் தொடர்: மணிஷ் பாண்டே (கேப்டன்), பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (கீப்பர்), ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குருணல் பாண்டியா, தீபக் சாஹர், நவ்தீப் சாய்னி, கலீல் அகமது, ஆவேஷ் கான்.

வெ.இ. ஏ முதல் 2 டெஸ்ட்: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பாஞ்ச்சால், ஈஸ்வரன், ஷுப்மான் கில், ஹனுமா விஹாரி, ஷிவம் துபே, விருத்திமான் சாஹா (கீப்பர்), கே.எஸ்.பரத் (கீப்பர்), கே.கவுதம், ஷாபாஸ் நதீம், மயாங்க் மார்கண்டே, நவ்தீப் சாய்னி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஆவேஷ் கான்.
வெ.இ.ஏ 3வது டெஸ்ட்: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா (கீப்பர்), கே.எஸ்.பரத் (கீப்பர்), ஷிவம் துபே, மயாங்க் மார்கண்டே, கே.கவுதம், ஷாபாஸ் நதீம், நவ்தீப் சாய்னி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஆவேஷ் கான்.

Tags : West Indies ,Confrontation ,India ,Sri Lanka , West Indies, Sri Lanka, Conflict, India 'A' Team Announcement
× RELATED சில்லி பாயின்ட்…