×

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் மேலும் கடுமையாகும்: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

மிர்சாபூர்: ‘‘பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசத் துரோக சட்டம் மேலும் கடுமையாக்கப்படும்,’’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மத்தியில் ஆட்சிக்கு வந்தால், தேசத் துரோக சட்டம் ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் கூறி வருகிறது. ஆனால், பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் மேலும் கடுமையாக்கப்படும். இதன் மூலம், சட்டத்தை மீறி செயல்படும் தைரியம் யாருக்கும் வராது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு நமது வீரர்கள் தீவிரவாத முகாம்களை அழித்து விட்டு வந்தனர். ஆனால், காங்கிரசை சேர்ந்தவர்கள், இந்த தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என எண்ணிக்கையை கேட்கின்றனர். வீரம் என்பது எண்ணிக்கையால் எடை போடுவது கிடையாது.

ராகுல் தனது கட்சியின் குறைந்தபட்ச வருவாய் திட்டமான ‘நியாய்’ குறித்து பேசுகிறார். ஜவகர்லால் நேரு முதல் சோனியா காந்தி வரை வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை தான் கூறிக்கொண்டு இருந்தனர். பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகள், பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கை பார்த்து பயந்து போய்தான் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.  
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Rajnath Singh ,announcement ,BJP , BJP rule, national treason, law, Rajnath Singh, announcement
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...