×

மானசரோவர் யாத்திரை முதல் முறை பக்தர்களுக்கு முன்னுரிமை

புதுடெல்லி: திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனித தலத்திற்கு செல்வதற்கான யாத்திரை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. இந்த ஆண்டிற்கான யாத்திரை ஜூன் 8ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8ம் தேதி முடிகிறது. இந்தாண்டு யாத்திரை செல்வதற்கு 2,996 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில், 2,256 பேர் ஆண்கள், 740 பேர் பெண்கள். 624 பேர் முதியோர்கள்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் வழியாக தலா 58 பேர் கொண்ட 18 குழுக்களும், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா வழியாக தலா 48 பேர் கொண்ட 10 குழுக்களும் அனுப்பப்பட உள்ளது. இதில், முதல் முறை யாத்திரீகர்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். கணினி மயமாக்கப்பட்ட தேர்வு முறையில், தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

Tags : pilgrims ,pilgrimage ,Manasarovar , Manasarovar, pilgrimage, first time, priority for the devotees
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு