×

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் பிளிஸ்கோவா

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் மோதிய பிளிஸ்கோவா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

மற்றொரு 2வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை போராடி வென்றார். விறிவிறுப்பான இப்போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்தியும் (ஆஸி.) 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார். சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் 2வது சுற்றில் மோதவிருந்த நிலையில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்தார். இதனால் வீனஸ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : round , Italy Open Tennis, 3rd, Blisssova
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து