ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்ட்டில் சிக்கிய நோயாளிகள் மீட்பு

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் லிப்ட்டில் சிக்கிய நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு 6 மாடி கட்டிடம் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாடியிலும் ஒரு பிரிவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த கட்டிடத்தில் நான்கு லிப்ட்டுகள் உள்ளன.

இதை மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஒரு லிப்ட்டில் அளவுக்கு அதிகமாக நோயாளிகள் ஏறியதால் மேல் மாடியில் செல்லும்போது பாதியில் லிப்ட் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து பணியில் இருந்த காவலாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த மருத்துவமனை எலக்ட்ரீஷியன் மற்றும் லிப்ட் பழுதுபார்க்கும் ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டனர்.


Tags : Stanley ,hospital lift recovery patients , Stanley Hospital, Lift, Patients, Recovery
× RELATED கள்ளக்காதலியுடன் நெருங்கி பழகியதால்...