×

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி வானங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் சமச்சீர் பாடத்திட்டம்  எப்போது அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்று முதல் பல தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்க குறிக்கோளை லட்சியமாக கொண்டு சி.பி.எஸ்.இ  பாடதிட்டத்துக்கு தங்களை மாற்றி கொண்டனர். சில பள்ளிகள் சி.பி.எஸ்.இ போர்டில் முறையான அங்கிகாரம் பெற்று இயங்கும் நிலையில் கட்டண பேராசை பிடித்த சில தனியார் பள்ளிகள் தங்களை தாங்களாகவே சி.பி.எஸ்.இ பள்ளிகள் என கூறி கொண்டனவே தவிர எந்த ஒரு அங்கிகாரமும் இன்றி செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டு வந்துவிடும் அடுத்த ஆண்டு கிடைத்துவிடும் பயமில்லாமல் உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேருங்கள் என்று கூறி விளம்பரம் செய்யும் இந்த போலி சி.பி.எஸ்.இ பள்ளிகளிடம் பெற்றோர் உஷாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். லட்சங்களில் நன்கொடை, கணக்கு வழக்கு இல்லா கட்டண உயர்வு  எதற்கும் ரசித்து கொடுப்பதில்லை.

கேள்வி கேட்போருக்கு முறையான பதிலும் சொல்வது இல்லை, தங்கள் பள்ளி கட்டண விவரத்தை இணையத்திலும் வெளியிடுவதில்லை. ஆனால் கேட்கும் பணத்தை நீட்டினாள் போதும் பெற்றோரிடம் கேள்வியே கேட்பதில்லை. இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கிறது பெரிய தனியார் பள்ளியின் அட்மிஷன். 95 சதவீத சி.பி.எஸ்.இ பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25 சதவீத கல்வி கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடப்பதில்லை என்பது பெருபாலான பெற்றோர்களின் குற்றசாட்டாக உள்ளது. அதே நேரத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியின் தரமோ இன்னும் அகல பாதாளத்தில் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள நோட்டிஸில் டெட் தேர்வில் ஏன் இன்னும் தேர்ச்சி பெறவில்லை என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இன்னும் டெட் தேவை கூட எழுதாமல் பணியாற்றி கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அவர்களுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்தால் நீட் தேர்வு எளிதாக எழுதலாம் என்று அனைவரும் நினைப்பதால், மெட்ரிக் பள்ளியில் படித்துவரும் மாணவர்களும் சி.பி.எஸ்.இ பள்ளியை தேடி செல்வதால் மெட்ரிக் பள்ளிகள் பல குறைத்த மாணவர் எண்ணிக்கையால் தள்ளாடிக்கொண்டுயிருக்கிறது. இந்த தள்ளாட்டத்தியும் 400 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பல முறையான அங்கீகாரம் இன்றி  செயல்பட்டு வருவதாகவும் சுட்டி கட்டப்பட்டு வருகின்றது.

இத்தகைய பள்ளிகளுக்கு வருகின்ற 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இன்று வரை அங்கிகாரம் இல்லாமல் மாணவர் சேர்க்கையை தடையின்றி அந்த பள்ளிகள் நடத்தி வருகின்றது. அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட எப்போதும் கூடுதலாக வசூலிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் தனியார் பள்ளிகளில் தேர்தல் பறக்கும்படையை போல அதிரடியாக புகுந்து அதிகாரிகள் சோதனை நடத்தினாலே கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை கைப்பற்றலாம் என்கின்றனர் கட்டண கொள்ளையால் பாதிக்க பெற்ற பெற்றோர்.அரசு நிர்ணயித்த கட்டணம் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் தாங்கள் பெற்றோரிடம் கூடுதல் கட்டணம் பெற வேண்டிய நிலையில் உள்ளதாகவும், அரசு தங்கள் பள்ளிகளில் உள்ள வசதிகளை நேரில் ஆய்வு செய்து கூடுதலாக உயர்த்தி ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : school skies ,parts ,Tamil Nadu , Examine the Tamils, schoolchildren, officers
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...