×

சிறிய ரக விமானத்தில் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து இந்திய பெண் விமானி உலக சாதனை

இந்தியாவை சேர்ந்த கேப்டன் ஆரோயி பண்டிட், எடை குறைந்த சிறிய ரக விளையாட்டு விமானம் மூலம் தனியாக அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து உலக சாதனை படைத்துள்ளார். மும்பையை சேர்ந்த ஆரோயி பண்டிட், 2018 ஜூலை 30-ம் தேதி தனது தோழி கீதீர் மிசுகிட்டாவுடன் ஓர் ஆண்டு உலக சுற்றுப்பயணத்தை தொடங்கி தொடர்ந்து பறந்து வருகிறார்.

உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மே 13ம் தேதி மஹி என்ற சிறிய ரக விமானம் மூலம் தனியாக ஸ்காட்லாந்திலிருந்து புறப்பட்ட ஆரோயி, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து வழியாக அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி சுமார் 3000 கி.மீ கடந்து, மே 14ம் தேதி கனடாவின் இகாலுட் விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

இதன் மூலம் சிறய ரக விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த முதல் பெண்மணி என்ற சாதனையை ஆரோயி பண்டிட் படைத்துள்ளார். மேலும், கிரீன்லாந்து மேல் தனியாக பறந்த முதல் பெண் விமானி என்ற சாதனையையும் ஆரோயி படைத்துள்ளார். வருகிற ஜூலை 30ம் தேதி நாடு திரும்பவுள்ள ஆரோயி மற்றும் கீதீர் மிசுகிட்டா இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார்கள் என கூறப்படுகிறது.


Tags : Indian ,Atlantic Ocean , Meet Captain Aarohi Pandit, the 23-year-old girl who became world's first woman to cross Atlantic Ocean in LSA
× RELATED சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி