×

கழுகுமலையில் கிரிவலப்பாதை சீரமைக்கப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

கழுகுமலை: கழுகுமலையில் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக மாறிய கிரிவல பாதையை சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கழுகுமலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், பிரதோசம் மற்றும் பவுர்ணமி நாட்களிலும் கழுகாசலமூர்த்தி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில், ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி கிரிவலம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்த கிரிவலத்தில் சுற்று வட்டார கிராமப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மாலை நேரங்களில் மலையை கிரிவலம் வந்து சுற்றி வருவது வழக்கம். தற்போது அந்த கிரிவலப்பாதையானது மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. கிரிவலம் நடந்து செல்பவர்களுக்கு மாலை நேரம் என்பதால் வெளிச்சம் இல்லாமல், சாலையில் உள்ள கற்கள் குத்தி, குழியில் தட்டுத்தடுமாறி விழுந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் பெரும் வேதனைக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் கிரிவலப்பாதையை சீரமைத்து தரவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Kiribadda ,eagle mountain , Kalugumalai, kirivalappatai
× RELATED கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில்...