×

உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த அப்பாஸ் இலியிவ் காலமானார்

மாஸ்கோ: உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் (123) காலமானார். ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் என்பவர் 1896ம் ஆண்டு பிறந்தார். ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா என்ற இடத்தில் இவர் வசித்து வருகிறார். இவரின் தினசரி உணவு பச்சை காய்கறிகள்தான் என கூறப்படுகிறது. மேலும் சுத்தமான பசும்பால் ஆகியவற்றை அருந்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கக் கூடியவர். அப்பாஸ் இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2ம் உலகப்போரில் பங்கேற்ற அப்பாஸின் வயது 123 என இங்குஷெஸியா நகர நிர்வாக சான்றிதழில் தெரியவந்துள்ளது. அவர் கடந்த 1917 முதல் 1922 வரை ரஷ்யாவின் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Abbas Liyiv ,world , Russia, Oldest Man, Recovers His Eyesight
× RELATED சில்லி பாயின்ட்…