×

காரைக்குடி அருகே சாக்பீசில் திருக்குறளை எழுதி மாணவர் சாதனை

காரைக்குடி: காரைக்குடி அருகே சாக்பீசில் திருக்குறள் எழுதி பிளஸ் 2 மாணவர் சாதனை படைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் செம்பனூர் பகுதியை சேர்ந்தவர் முருகப்பன், பத்மபிரியா தம்பதியின் மகன் சந்தோஷ் (18). பிளஸ் 2 மாணவர். இவரது தந்தை முருகப்பன் எலக்ட்ரிக்கல் பணிகளை செய்துக்கொண்டே ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். தந்தையுடன் எலக்ட்ரிக்கல் பணிகளுக்கு சந்தோஷ் உடன் செல்வது வழக்கம். அப்போது அவரும் சில பொருட்களை தயார் செய்து வந்துள்ளார்.  கடந்த 2017ம் ஆண்டு 10ம் வகுப்பு படிக்கும்போது 99.2 அலைவரிசையில் 5 மீட்டர் சுற்றளவுக்கு கேட்கும் வகையில் எப்.எம் ரேடியோ கண்டுபிடித்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது 1330 குறள் மற்றும் 133 அதிகாரத்தை 1,463 சாக்பீசில் எழுதி சாதனை படைத்துள்ளார். இச்சாதனை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சோழன் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து மாணவர் சந்தோஷ் கூறுகையில், ‘‘சிறுவயது முதல் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். தமிழ் மொழி மீது உள்ள ஆர்வத்தால் இதில் சாதனை புரிய வேண்டும் என நினைத்தேன். அதன்படி 4 இஞ்ச் கொண்ட சாக்பீசில் ஒரு குறள் என 1,330 சாக்பீசில் குறள்களை சிறிய கத்தி மூலம் எழுதியுள்ளேன். தவிர 133 சாக்பீசில் அதிகாரங்களை எழுதியுள்ளேன். இதற்கு 8 நாட்கள் ஆனது. கின்னஸ் புத்தகம் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்டுக்கும் விண்ணப்பித்துள்ளேன்’’ என்றார்.

Tags : Thirukkural ,Karaikudi ,Sagbis , Karaikudi, Chakbis, Tirukural
× RELATED திருக்குறளில் வேள்வி!