×

அமெரிக்க சீனா இடையேயான வர்த்தகப்போரால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை :நிபுணர்கள் கணிப்பு

அமெரிக்க சீனா இடையேயான வர்த்தகப்போரால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றும் மாறாக நல்ல பல வாழ்ப்புகளை உருவாக்கும் என்றும் வர்த்தக நிபுணர்கள் கணித்துயிருக்கின்றன.வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு சீனாவின் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது 25% அளவிற்கு  வரிகளை உயர்த்தி அமெரிக்க நடைமுறை படுத்தியது .இதற்கு பதிலடியாக வருகின்ற ஜூன் மாதம் முதல் 60 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீதான வரியை 5 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆகா உயர்த்தப்படும் என்று சீனா கூறியிருக்கிறது.

அமெரிக்க- சீனா இடையேயான வர்த்தக போரால் இந்தியாவிற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என வர்த்தக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.மாறாக அமெரிக்காவிற்காக சீனா பிரத்தேகமான முறையில் தரமாக தயாரிக்கும் பொருட்கள் இந்தியாவிற்கு பெரிய அளவிலான வரி விதிப்புக்கள் இன்றி ஏற்றுமதி ஆகும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் இந்திய சந்தைகளில் குறைவான விலைக்கு சீனா பொருட்கள் கிடைக்கும் நிலை உருவாகும். அமெரிக்க - சீனா இடையேயான வர்த்தக போர் இந்தியாவிற்கு தங்கமான வாய்ப்பாக அமையும் என்றும் வர்த்தக நிபுணர்கள் கணித்துயிருக்கின்றன.



Tags : India ,experts ,China ,US , US,china,trade war,india
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...