8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: 8 நாடுகள் பங்கேற்கும் இளையோர் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் அடுத்த மாதம் 10-ம் தேதி முதல்  21- வயத்துக்குட்பட்டோர்களுக்கு ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, நெதர்லாந்து, பெல்ஜியம், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மன்தீப் மோர் தலைமையில் இந்திய அணி களம்நிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமன் பெக் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இளையோர் ஹாக்கி அணி விவரம்;

முன்கள வீரர்கள்; அமன்தீப் சிங், ராகுல் குமார் ராஜ்பர், ஷிபம் ஆனந்த், சுதீப் சிர்மாகோ, பிரப்ஜோத் சிங்.

மத்திய கள வீரர்கள்; யாஷ்தீப் சிவாச், விஷ்னு காந்த் சிங், ரபிசந்த்ரா சிங் மொய்ரங்தெம், மணிந்தர் சிங், விஷால் அன்டில்

தற்காப்பு வீரர்கள்;மந்தீப் மோர், பிரதாப் லக்ரா, சஞ்சய், அக்‌ஷ்தீப் சிங் ஜூனியர், சுமன் பெக், பரம்ப்ரீத் சிங்.

கோல் கீப்பர்கள்: பிரசாந்த் குமார் சவுகான், பவன்.


× RELATED 28 வருஷமா குடியிருக்கோம்... எங்களுக்கும் வேண்டும் இந்திய குடியுரிமை