×

அறிவிப்பில்லாத மின்தடை மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: தண்டையார்பேட்டையில் பரபரப்பு

பெரம்பூர்: தண்டையார்பேட்டை நேதாஜி நகர், கருணாநிதி நகர், இந்திரா காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் ேமற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், இரவு நேரங்களில் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டால், உரிய பதில் அளிப்பதில்லை, என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த பகுதியில் அறிவிப்பில்லாத மின் தடை ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து ேநதாஜி நகர் 3வது தெருவை சேர்ந்த 50க்கும் ேமற்பட்ட பொதுமக்கள் தண்டையார்பேட்டை துர்காதேவி நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த மின்வாரிய ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் ேபசி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Siege ,Notification Response Power Station ,Tondiarpet , Notification ,resistance, Public, Siege, Tondiarpet
× RELATED காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம்