×

ஓட்டலில் தங்கியபோது நள்ளிரவில் குமாரசாமி அறையில் வருமான வரி ரெய்டு: அமைச்சர்களிடமும் சோதனை

ஹுப்பள்ளி: கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தங்கியிருந்த ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.கர்நாடகாவில் காலியாக இருக்கும் சிஞ்சோளி, குந்தகோளா சட்டப்பேரவை  தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ், பாஜ, மஜத கட்சி தலைவர்கள் இறுதி கட்ட  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் சிஞ்சோளியில் பிரசாரம்  செய்த முதல்வர் குமாரசாமி, இரவில் ஹுப்பள்ளி மாநகரில் உள்ள டெனிசஸ்  ஓட்டலில் தங்கினார். அதே ஓட்டலில் மாநில அமைச்சர்கள் தேஷ்பாண்டே, ஜமீர் அகமதுகான் ஆகியோரும் தங்கினர்.

நள்ளிரவில்  ஓட்டலுக்கு வந்த கர்நாடகா-கோவா மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள்,  முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கிருந்த அறைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.  அதில், ஆவணங்களோ, ரொக்க பணமோ எதுவும்  கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். கடந்த மாதம் 18ம் தேதி மக்களவை  தேர்தல் நடந்தபோது மண்டியா தொகுதியிலும் அமைச்சர் புட்டராஜு, அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

Tags : Reed ,Ministers , hotel, Coomaraswamy, Income Tax Raid, Examining, Ministers
× RELATED மக்களவை தேர்தலில் EVM – VVPAT ஒரே இணைப்பில்...