வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்தார். இன்று முதல் 19ம் தேதி வரை  தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 5 நாட்களிலும் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரை நெய்யபிஷேகம்  நடக்கிறது. வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. அத்துடன் வைகாசி மாத பூஜைகள் நிறைவுபெறும்.

Tags : Sabarimala temple ,opening ceremony ,pooja , month , May pujas, Opening, Sabarimala, Temple
× RELATED வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி