×

ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்

வாஷிங்டன்: அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.ஜப்பானில் வரும் ஜூன் மாதம் ‘ஜி 20’ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதனால் ஜூன் மாதம் நடக்கும் உச்சி மாநாட்டில், அதன் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.அமெரிக்க அதிபர் டிரம்பும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘மாநாட்டுக்கு இடையே, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜிங்பிங்கையு சந்திக்க திட்டமிட்டுள்ளேன்’’ என்று  கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் நடக்கிறது. இதனால் ஜூன் மாதத்தில் இந்தியாவில் புதிய பிரதமர் ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பார். அவர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்பட்சத்தில், அவரையும் மற்ற நாட்டு தலைவர்கள் சந்திக்க  வாய்ப்பு உள்ளது.
மேலும், மக்களவை தேர்தலுக்கு பின்னர் இந்திய பிரதமர் கல்நது கொள்ளும் முதல் வெளிநாட்டு நிகழ்ச்சியாக இந்த மாநாடு இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : President ,US ,Russian , US President ,Trump ,meet ,Russian President
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...