×

போனா வராது, விட்டா கிடைக்காது... ரூ.1 லட்சம் கட்டி கணிச்சு சொன்னா ரூ.1 கோடி பரிசு தரப்படும்: ஜோதிடர்களுக்கு சவால்

அகில கர்நாடகா முற்போக்கு சிந்தனையாளர் சங்க தலைவர் ஏ.எஸ்.நடராஜ் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
அரசியல் தலைவர்களை திருப்திப்படுத்த, தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னரே, குறிப்பிட்ட தொகுதியில் இவர்தான் வெற்றி பெறுவார் என ஜோதிடர்கள் முன்கூட்டியே கூறிவருவது விசித்திரமாக உள்ளது. இப்படி அரசியல்வாதிகளை நம்பவைக்கும் ஜோதிடர்களுக்கு சவால் விடுகிறேன்.

நாட்டில் உள்ள மொத்த மக்களவை தொகுதிகளில், ஏதாவது ஒரு தொகுதியில் யார் வெற்றி பெறுவார், அவர் எவ்வளவு வாக்குகளை பெறுவார், அதே தொகுதியில் தோற்கும் வேட்பாளர் எவ்வளவு வாக்குளை பெறுவார் என்ற முழு விவரத்துடன் ரூ.ஒரு லட்சத்தை சேர்த்து இம்மாதம் 20ம் தேதிக்குள் முன்கூட்டியே செலுத்த வேண்டும். ஒருவேளை ஜோதிடர் கூறியது போல நடந்துவிட்டால், ரூ.ஒரு லட்சத்துடன் ரூ.ஒரு கோடி சேர்த்து பரிசாக கொடுக்கப்படும். ஒருவேளை ஜோதிடர் கூறியது தவறானால் அவர் முன்கூட்டியே செலுத்திய ரூ.1 லட்சம் திருப்பி கொடுக்க முடியாது. இவ்வாறு ஏ.எஸ்.நடராஜ் கூறினார்.

Tags : Astrologers , It does not come, will not get, for astrologers, Challenge
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி பெண் ஜோதிடர் கைது