×

நான் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக நிரூபிக்க முடியுமா? எதிர்கட்சிகளுக்கு மோடி சவால்

உத்தரப் பிரதேசத்தில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார். பாலியாவில் நேற்று அவர் பேசியதாவது:
நான் இந்த கூட்டத்தில் வெளிப்படையாக ஒரு சவாலை விடுக்கிறேன். பெரும் கலப்படம் மிகுந்த எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள், எனக்கு பினாமி பெயரில் சொத்துக்கள், பண்ணை வீடு, வணிக வளாகங்கள் அல்லது வெளிநாட்டு வங்கிகளில் பணம், வெளிநாடுகளில் சொத்து அல்லது சொகுசு கார்கள் வாங்கி இருக்கிறேன் என நிரூபிக்க முடியுமா?

என் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்களை கூறும் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாக பதிலளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சாதிய அரசியல் செய்கின்றன. தங்கள் பைகளை நிரப்பிக் கொள்வதோடு, உறவினர்களுக்காகவும் பங்களாக்களையும், அரண்மனைகளையும் கட்டிக் கொள்கின்றன என்று பேசினார்.

நான் ‘காசி வாசி’
உபியின் வாரணாசி மக்களவை தொகுதிக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மோடி நேற்று பிரசாரத்தில் பேசுகையில், ‘‘நான் காசி-வாசி. மக்களவை தேர்தலில் 2வது முறையாக என்னை தேர்ந்தெடுக்க வழி வகுக்கும் வகையில் மக்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும்.  காசி தான் எனக்கு வழிகாட்டும் சக்தி. காசியுடனான எனது பந்தம் மிகவும் வலுவானது. ஜனநாயக திருவிழாவில் பங்கேற்று சாதனை படையுங்கள்” என்றார்.


Tags : Modi , Can I prove the property, can it? Opposition, Modi, challenge
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...