×

மு.க.ஸ்டாலின் கூட்டணி பற்றி பேசியதாக கூறி மோடிக்கு பெருமை சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம்: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: மு.க.ஸ்டாலின் கூட்டணி பற்றி பேசியதாக கூறி பிரதமர் மோடிக்கு பெருமை சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம் என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த இரண்டு தினங்களாக மிகவும் மனச்சோர்வுடன் காணப்படுகிறார். தமிழகத்தில் இந்த தேர்தலில் வெற்றிவாய்ப்பு முழுமையாக அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்தவுடன் எங்களை மிகவும் கடுமையாக சாடுகிறார். இருந்தாலும் ஒரு சகோதரியின் விமர்சனமாகவே நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம்.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம், கூட்டணி பற்றி பேசியதாக கூறியிருக்கிறார். அரண்டவன் கண்ணிற்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல, தமிழிசை மிகுந்த அச்சத்துடன் காணப்படுகிறார். மம்தா பானர்ஜியிடம் இரண்டு முறை பேசுவதற்காக மோடி முயற்சி செய்தார். ஆனால், இரண்டு முறையுமே மம்தா பானர்ஜி மோடியிடம் பேச விரும்பவில்லை.

அதற்கு அவர் சொன்ன விளக்கம் 23ம் தேதிக்கு பிறகு புதிய பிரதமர் வருகிறார், அவருடன் பேசிக் கொள்கிறேன் என்று மம்தா கூறிவிட்டார். எனவே, மம்தா பானர்ஜியே மோடியிடம் பேச விரும்பாத போது, திமுக தலைவர் ஸ்டாலின், மோடியிடம் என்ன பேசப் போகிறார். இப்படியெல்லாம் மோடிக்கு ஒரு பெருமையை சேர்க்க தமிழிசை முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

கமல்ஹாசன், கோட்சேவை பற்றி சொன்னதற்காக அதிமுக அமைச்சர் ஒருவர் துள்ளிக் குதிக்கிறார். கமல்ஹாசன் நாக்கை அறுத்து விடுவேன் என்று சொல்கிறார். இதை விட ஒரு வன்முறையே இருக்க முடியாது. நீதிமன்றம் தாமாகவே அவர் மீது ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரிக்கலாம்.   கமல்ஹாசன் சொன்னது இந்து மதத்திற்கு எதிரான வார்த்தைகள் அல்ல, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Modi ,Tamil Nadu , MK Stalin's alliance, Modi, pride, democracy, initiative, KS Azhagiri, denounced
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...