24-31ம் தேதி வரை நடைபெற இருந்த துறைத்தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

சென்னை: வரும் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த துறைத்தேர்வுகள் ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் நேற்று வெளியிட்ட அறிக்கை: 24.5.2019 முதல் 31.5.2019 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மே 2019ம் ஆண்டிற்கான துறைத்தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இத்தேர்வுகள் 8.6.2019 முதல் 15.6.2019 வரை புது டெல்லி உட்பட 33 தேர்வு மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச்சீட்டினை 3.6.2019 முதல் 15.6.2019 வரை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.


× RELATED கல்வி உதவித்தொகை பெற மாற்றத்திறன்...