×

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மாநில அரசு எதிர்க்கும்படி வலியுறுத்துவேன்: அன்புமணி பேட்டி

பழநி: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய, மத்திய அரசை கண்டித்து போராடவும் தயங்க மாட்டோம், இத்திட்டத்தை மாநில அரசு எதிர்க்கும்படி முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று அன்புமணி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயிலில் தரிசனம் செய்ய வந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நேற்று அளித்த பேட்டி:

தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண கோதாவரி - காவிரியை இணைக்க வேண்டும். கமல்ஹாசன் பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் எடுக்க 274 இடங்களில் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இத்திட்டம் ஆபத்தான திட்டம். இதனை பாமக எதிர்க்கும். சட்டத்தை மதிக்காத வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை பாமக கண்டிக்கிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை மாநில அரசும் எதிர்க்க வேண்டும். இதுதொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவும் பாமக தயங்காது. பாமகவின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம். உள்ளாட்சி தேர்தலிலும் எங்களது கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : state government , Hydrocarbon, state government, dear
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...