×

போன் தகவல் எல்லாமே திருடு போயிடும்... ஆபத்து... அலர்ட் ப்ளீஸ்... ‘வாட்ஸ் ஆப்’-ஐ ‘அப்டேட்’ பண்ணுங்க

உங்க ஸ்மார்ட் போன்ல வாட்ஸ்-ஆப் இருக்கா?... என்ன சார் இது கேள்வி. போன்ல சிம் இருக்கோ இல்லையோ, வாட்ஸ் ஆப் கண்டிப்பா இருக்கும். வை-பை கனெக்ஷன் கொடுத்தாவது பார்த்துடுவாங்க. போன் பண்றது கூட ‘வாட்ஸ் ஆப் கால்’ மூலமாகத்தான். இவங்களுக்குதான் இந்த விஷயம் ரொம்ப முக்கியம். காலைல எழுந்ததும் உடனே ஸ்மார்ட் போனதான் பலபேர் தேடறாங்க. டைம் பார்க்குறதுக்கு இல்லை. வாட்ஸ் ஆப் பாக்கறதுக்குதான். குட்மார்னிங்ல ஆரம்பிச்சு... குட் நைட் வரைக்கும் வாட்ஸ் ஆப் தான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சு.

சரி, விஷயத்துக்கு வருவோம். வாட்ஸ் ஆப் பார்க்கிறது இருக்கட்டும் முதல்ல அதை அப்டேட் பண்ணுங்க. பல பேர் ஆப்ஸ் எதையுமே அப்டேட் பண்றதே இல்லை. ஆனால், இப்ப நீங்க அப்டேட் பண்ண வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற சைபர் நிறுவனம் ஒரு ஸ்பைவேர்-ஐ உருவாக்கி இருக்காம்.

‘வாட்ஸ் ஆப் போன் கால்’ மூலமாக இந்த ஸ்பைவேரை நிறுவி விடுகிறார்களாம். போன் அழைப்பை நீங்கள் எடுக்காவிட்டால் கூட இந்த ஸ்பைவேர் உங்களுக்கே தெரியாமல் போனில் நிறுவப்பட்டு விடும். அப்புறம், இ-மெயில், மெசேஜ், போட்டோ மற்றும் போனில் பதிவு செய்து வைத்திருக்கும் முக்கிய தகவல், பாஸ்வேர்ட் எல்லாவற்றையுமே உருவி விடுவார்கள். இதை கண்டுபிடித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், இதில் இருந்து தங்கள் பயனாளர்களை காக்கும் வகையில் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.  

ஆன்டிராய்டில் வாட்ஸ் ஆப் வெர்ஷன் ஆன்டிராய்டு v2.19.134 மற்றும் அதற்கு முன்பு, வாட்ஸ் ஆப் பிசினஸ் v2.19.44 மற்றும் அதற்கு முன்பு, ஆப்பிள் போன்களில் v2.19.51 மற்றும் அதற்கு முன்பு விண்டோஸ் போனில் v2.18.348 மற்றும் அதற்கு முன்பு, டைசன் ஓஎஸ் v2.18.15 மற்றும் அதற்கு முன்பு உள்ள வெர்ஷன்களில் சில பயனாளர்கள் ஸ்பைவேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் மற்றும் விண்டோஸ், டைசன் ஆப்ஸ் ஸ்டோர்களின் மூலம் அப்டேட் செய்ய வேண்டும். உடனே அப்டேட் பண்ணுங்க ப்ளீஸ்.

Tags : Phone information, stealing, risk, 'vats' of 'update'
× RELATED தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 3...