×

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக மழை பெய்யும் : வானிலை நிபுணர்கள் கணிப்பு

சென்னை : இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த மாதம் 22-ம் தேதி அந்தமான் - நிகோபாரில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 22-ம் தேதி தொடங்கினாலும் பின்னர் பருவமழையின் வேகம் குறைந்து ஜூன் 4-ல் கேரளத்தில் பருவமழை ஆரம்பிக்கும் என வானிலை ஆய்வு மேற்கொள்ளும் தனியார் அமைப்பான ஸ்கைமெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : weather forecasters , Southwest monsoon rains, less rain ,expected
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...