×

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு!

அமராவதி : ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளது. இறுதிகட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் முடிவு வரும் 23ம் தேதி அறிவிக்கப்படும். தேர்லையொட்டி ராகுல்காந்தி, மோடி, அமித்ஷா, மம்தா பானர்ஜி, மாயாவதி, சந்திரபாபு நாயுடு ஆகிய தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்லாது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் பணியாற்றி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் முடிவின் அடிப்படையில் மத்தியில் கூட்டாட்சி அமைப்பது குறித்து மாநிலக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திமுக தலைவர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பானது மரியாதை நிமித்தமானது என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது துரைமுருகன் உடன் இருந்தார். இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து 20 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். துரைமுருகன் மனைவி, மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் சில எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிநிலையில் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரும் 21ம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்ற இருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வைத்துக்கொள்ளலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்பு அரசியல் ரீதியானது இல்லை என துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். விஜயவாடா கோயிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பிய போது நட்பின் அடிப்படையில் தலைமை அலுவலகத்திற்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தாக துரைமுருகன் தகவல் அளித்துள்ளார். 


Tags : Duramurugan ,Chandrababu Naidu ,DMK ,Andhra Pradesh , Chief Minister Chandrababu Naidu, DMK, Duraimurugan, Lok Sabha election
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....