×

கொடைக்கானலில் கேரள பலா விற்பனை அமோகம்

கொடைக்கானல் : கொடைக்கானலில் கேரள பலா பழங்கள் விற்பனை அமோகமாக உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆரஞ்சு, ஆப்பிள், பிளம்ஸ், பலா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்கள் அதிகளவில் விளைகின்றன. தற்போது குளு, குளு சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருப்பதால் பழங்களின் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. இங்கு விளையும் பலா பழம் மட்டுமின்றி கேரளாவிலும் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தற்போது கேரள பலா பழங்கள் ஒரு கிலோ ரூ.30 வீதம் என ஒரு பழம் சுமார் ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து பலா பழ வியாபாரிகள் கூறுகையில், ‘கொடைக்கானலில் பலா பழ சீசன் துவங்க இன்னும் தாமதமாகும். தற்போது குளு, குளு சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்காக கேரள பகுதிகளில் இருந்து பலா பழங்களை வாங்கி விற்கிறோம். கொடைக்கானல் பலா பழத்தை விட கேரள பலா பழங்கள் நல்ல ருசியாகவும், மிக அழகாக சுளை இருக்கும். விற்பனை அமோகமாக இருப்பதால் எங்களுக்கு போதிய லாபம் கிடைக்கிறது’ என்றனர்.


Tags : Kerala ,jack sale ,Kodaikanal , Kodaikanal, jack sale, kerala
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...