×

வத்தல்மலையில் பூத்துக் குலுங்கும் சரக்கொன்றை மலர்கள்

தர்மபுரி : சரக்கொன்றை மரங்கள் இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. கேரளாவின் மாநில மலரான சரக்கொன்றை, மலையாள மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அலங்கார அழகு தாவரமாகவும், மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது. பண்டைய தமிழ் நூலில் இத்தாவரம் கொன்றை எனவும், சங்க காலத்தில் இது முல்லை நிலத்திற்குரிய பூவாகவும் கருதப்பட்டது.

இது தாய்லாந்து நாட்டின் தேசியப் பூ மற்றும் மரமாகும். கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், பருவம் தவறி செப்டம்பர் மாதம் பூ பூத்தது. நடப்பாண்டில் கோடை மழை, தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. இதையொட்டி வத்தல்மலை மலைகிராமங்களில் சரக்கொன்றை பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டி, கலெக்டர் பங்களா, பாப்பாரப்பட்டி ஆகிய பகுதிகளிலும் சரக்கொன்றை மலர்கள் அதிகமாக பூத்துள்ளது.

Tags : dharmapuri, vathalamalai, Flowers in the string
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...