அலாஸ்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

அமெரிக்கா: அலாஸ்காவில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் 7 நாள் பயணம் மேற்கொண்டவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் மிதக்கும் விமானத்தில் அலாஸ்கா பகுதியில் உள்ள கெட்சிகன் என்ற இடத்தை சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அதே வேளையில் 4 பேர் கொண்ட வேறு சுற்றுலாக் குழுவினர் மற்றொரு மிதக்கும் விமானத்தில் பயணித்துக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மிதக்கும் விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டன. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணமல் ஒருவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.


Tags : plane crash ,Alaska , Five tourists,killed, plane crash , Alaska
× RELATED சென்னைக்கு சிகிச்சை பெற வந்தபோது...