அமெரிக்காவில் தனது நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்களுக்கு ட்ரம்ப் இப்தார் விருந்து உபசரிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் தனது நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் இஸ்லாமியர்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இப்தார் விருந்து அளித்து உபசரித்தார். ரமலான் பண்டிகையையொட்டி நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் இஸ்லாமிய நிர்வாகிகள் உள்ளிட்டோரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ட்ரம்ப் அவர்களுக்கு இப்தார் விருந்து அளித்தார் மகிழ்ந்தார்.

மேலும் இந்நிகழ்வில் அமெரிக்கா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இவ்விருந்தில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு குறித்து பேசிய ட்ரம்ப் ரமலான் என்பது சகிப்புத்தன்மையையும், அமைதியையும் நிலை நாட்ட அனைவரும் ஒன்று கூடும் ஒரு நிகழ்வு எனும் தொனியில் குறிப்பிட்டார். மேலும் இஸ்லாமிய நண்பர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் எனவும் கூறினார்.


× RELATED ஹஜ் பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கு...