×

மாஸ்கோ உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு 2,000 ரூபாய் அபராதம்

மாஸ்கோ: மாஸ்கோ உக்ரைன் நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தன் ஓட்டுச்சீட்டை பத்திரிகைகளுக்கு காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. அந்நாட்டு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலமடைந்த வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இம்மாத இறுதியில் அதிபராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் ஓட்டுப் போடும் போது அவரை படமெடுத்த பத்திரிகை மற்றும் டிவி கேமராக்களுக்கு அவர் ஓட்டுச்சீட்டு தெரியுமாறு, போஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து உள்ளூர் நீதிமன்றத்தில் தன் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டதை அடுத்து, அவருக்கு 2,000 ரூபாய் மதிப்பில் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Moscow ,Vladimir Gellensky ,election ,Ukrainian , Volodymyr,won,Moscow,presidential election,2,000 rupees
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...