×

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மஞ்சளில் கல், மண் நீக்க தானியங்கி இயந்திரம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மஞ்சளை ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கும், ஈரோடு, கோபி சொசைட்டிகளிலும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதில், விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சளில் கல், மண் கழிவுகள் இருப்பதாக கூறி 2 கிலோ மஞ்சளை நீக்கி விடுகின்றனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதைத்தவிர்க்க தற்போது பெருந்துறை விற்பனை கூடத்தில் ரூ.4.2 கோடி மதிப்பில் தானியங்கி பகுப்பாய்வு செய்யும் நவீன இயந்திரம் வாங்கப்பட்டு, நிறுவும் பணிகள் நடந்து வருகிறது.இதுகுறித்து ஒழுங்கு முறை விற்பனை கூட துணை இயக்குனர் சின்னசாமி கூறுகையில்,` ஈரோடு மாவட்ட விற்பனை குழுவின் கீழ்  15 வகையான விவசாய விளைப் பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விவசாயிகளிடம், ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் முன்னிலையில் வியாபாரிகள் பொருட்களை ஏலம் எடுப்பதால், இடைத்தரகர் இன்றி நியாயமான விலை கிடைக்கிறது. வங்கி கணக்கு மூலம் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மஞ்சள் மூட்டைக்கான எடைக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பெருந்துறை ஒருங்கிணைந்த ஒழுங்கு முறை கூடத்தில் ரூ.4.2 கோடி மதிப்பில் தானியங்கி மற்றும் பகுப்பாய்வு இயந்திரம் தயாராகி வருகின்றன.  இன்னும் சில மாதங்களில் இப்பணி முடியும். அதன் பிறகு, விவசாயிகள் கொண்டு வரும் மஞ்சள் மூட்டைகள் கல், மண் நீக்கி, பகுப்பாய்வு செய்து, 65 கிலோ மூட்டைக்கு பதிலாக 50 கிலோ மூட்டைகளாக பேக்கிங் செய்யப்படும்’ என்றார்.

Tags : removal , erode,soil ,stone ,manjal ,Automatic machine
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...