×

இலங்கையில் பதற்றம்...... மசூதிகள் சூறையாடல்: இருதரப்பு மோதலால் ஊரடங்கு உத்தரவு அமல்

கொழும்பு: இலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியாகி உள்ளார். இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8 இடங்களில் பயங்கரவாத தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இந்த தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். இதேபோல் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன் தாக்குதலுக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து இலங்கையில் அங்கங்கே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கையில் படிப்படியாக பதற்றம் தணிந்து வந்த நிலையில், இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாளசூரியா ஆகிய  இடங்களில்  முஸ்லீம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மசூதி சூறையாடப்பட்டது. இதனால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டு நேற்று காலை  6 மணிக்கு திரும்பப்பெறப்பட்டது.  இருப்பினும் மீண்டும் ஹெட்டிபோலா எனும் நகரில் இரு சமூகத்தினருக்கு இடையே  வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து இரவு 9 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் குலியபிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா, டும்மாளசூரியா ஆகிய  நகரங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.  இரு சமூகத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து  ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் ஆகியவற்றுக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Sri Lanka ,conflict , Sri Lanka, mosque, Islam, Colombo, curfew
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...