வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத விவகாரம் நான் கள்ள ஓட்டு போடவில்லை: நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத  நிலையில் வாக்களித்தார்.  இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின்  விழாவின்போது நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:நான் இந்த நாட்டின் குடிமகன். வாக்களிக்கும் உரிமை  பெற்றவன். பல தேர்தல்களில் வாக்களித்திருக்கிறேன். அதேபோன்று இந்த  தேர்தலிலும் வாக்களிக்க சென்றேன். வாக்குச்சாவடியில் எனது அடையாள அட்டையை  காண்பித்தேன், வாக்குச்சாவடி அதிகாரிகள் பட்டியலில் பெயர் இல்லை  என்றார்கள்.  ஆனாலும் வாக்களிக்க அனுமதித்தார்கள். அதன்பேரில்  வாக்களித்துவிட்டு திரும்பினேன்.

வாக்காளர் பட்டியலில் பெயர்  இல்லாதது எனது தவறல்ல. அது என் பிரச்னையும் அல்ல. எந்த அதிகாரியும்  என்னிடம் விசாரணை நடத்தப் போவதாக கூறவும் இல்லை. நடத்தவும் இல்லை. நான்  கள்ள ஓட்டு போட்டதாக செய்தி வந்தது, வருத்தம் அடைய வைத்தது. நான் எனது ஜனநாயக கடமையை  நிறைவேற்றினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sivakarthikeyan , Non-name issue,electoral roll, Actor Sivakarthikeyan
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...