மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி பயிற்சி மையம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை:  தமாகா தலைவர் ஜி.க.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, தொழில், விளையாட்டு என பல்வேறு துறைகளில் நிதியுதவி, கடன் உதவி, பதவி உயர்வு போன்றவற்றில் முன்னுரிமை கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தனி பயிற்சி மையம் அமைத்து, தனி பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளித்து நாடு முழுவதும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும், உலக அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற ஊக்கமும், உதவிகளும் வழங்க வேண்டும்.

மேலும் நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் விரும்புகின்ற துறைகளில் முன்னேற்றம் காண அவர்களுக்கென உள்ள உரிமைகள், உதவிகள், சலுகைகள் போன்றவற்றை முறையாக சரியாக சென்றடைய செய்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பார்கள். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துகிறேன்.

Tags : Training Center for Displaced Persons ,GK Vasan , disability ,players, Separat,e Training , GK Vasan's, assertion
× RELATED இலங்கை கடற்படையால் மீனவர்கள்...