×

மீண்டும் பணி வழங்க கோரி ஜப்பான் துணை தூதரகத்தை ஊழியர்கள் திடீர் முற்றுகை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் இருங்காட்டுகோட்டையில் அசாகி இந்தியா கிளாஸ் லிட் என்ற பெயரில் கண்ணாடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் கண்ணாடிகள் ஹூண்டாய், டொயோட்டா, போர்டு உள்ளிட்ட கார் மற்றும் ஆட்டோ நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 240 நிரந்தர தொழிலாளர்களும், ஒப்பந்த முறையில் 800க்கும் மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர்.தொழிற்சாலையில் தொழிற்சங்கம் தொடங்கியதாக 28 நிரந்தர ஊழியர்களை நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது. இதையடுத்து தொடர் வேலைநிறுத்தம் நடக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜப்பான் துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஊழியர்கள் முடிவு செய்தனர். அதை தொடர்ந்து ஜப்பான் துணை தூதரகம் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் திட்டமிட்டப்படி சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் அசாகி கண்ணாடி தொழிற்சாலை ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சங்கம் தொடங்கிய ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முற்றுகை போராட்டத்தின் இறுதியில்  ஊழியர்கள் ஜப்பன் துணை தூதர் அதிகாரி கொஜிரோ ஒச்சியாமாவை சந்தித்து மனு அளித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : siege ,Consulate ,Japanese , Demanding ,job back,Japan's ,Embassy ,sudden siege
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி