×

மகனின் ஆசையை நிறைவேற்றிய தந்தை மணமகள் இல்லாமலேயே களைகட்டிய திருமணம்: குதிரை சவாரி, 800 பேருக்கு விருந்து

காந்திநகர்:  குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு மணமகள் இல்லாமலேயே தடபுடலாக திருமணம் செய்து வைக்கப்பட்டு 800 பேருக்கு விருந்தும் பரிமாறப்பட்டது. குஜராத்தின் சபர்காந்தா மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ணு பரோட். இவருக்கு அஜய் பரோட் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு வயது 27. ஆனால் ஒரு இளைஞருக்கு உண்டான மனவளர்ச்சி அஜய் பரோட்டுக்கு கிடையாது. காரணம் அவர் ஒரு மாற்றுத்திறனாளி. மனவளர்ச்சி குன்றிய அஜய் சமீபத்தில் தனது உறவினரது வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தார். அதைப் பார்த்த அஜய் மனதிலும் தனக்கும் இதுபோன்றதொரு விழா நடக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.  ஓரிரு நாட்களில் இந்த எண்ணம் அஜய்க்கு மாறிவிடும் என அவரது தந்தை நினைத்தார். ஆனால் அஜய்யோ தனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என வற்புறுத்த தொடங்கினார். மகனின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என உறுதி எடுத்தார். இதனையடுத்து விஷ்ணு ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி அஜய்க்கு திருமண ஏற்பாடுகள் ெசய்யப்பட்டது. திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து வழங்கப்பட்டது.

திருமணத்திற்கு முன் நடக்கும் மெகந்தி, நலங்கு, ஆட்டம் பாட்டம் என திருமண விழா களைகட்டியது. உறவினர்கள் திருமணத்திற்கு வந்தனர். குஜராத்தி முறைப்படி மணமகனான அஜய் குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட இசைக்கு ஏற்ப நடனமாடியபடியே அஜய் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்.திருமண நாளன்று தங்க நிறத்தினலான ஷர்வானி, பிங்க் நிற தலைப்பாகையை அஜய் அணிந்திருந்தார். திருமண மண்டபத்தையும் மணமகன் வந்தடைந்தார். அனைத்து சம்பிரதாயங்கள் நடந்தேறியது. ஆனால் மணமகள் மட்டும் இல்லை. காரணம் மணமகள் இல்லாமலேயே தான் இந்த திருமணத்தை விஷ்ணு ஏற்பாடு ெசய்தார். தொடர்ந்து திருமணத்திற்கு வந்திருந்த சுமார் 800 பேருக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. தனது மகனின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்கு தனக்கு வேறு வழி தெரியவில்லை என விஷ்ணு நெகிழ்ச்சியோடு கூறினார். இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், எனது மகன் தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. அவனுக்கு ஏற்ற பெண்ணை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. எனவே குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து மணமகள் இல்லாமல் திருமண விழாவை நடத்துவதற்கு முடிவு செய்தோம். எனது மகனின் ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவன் மகிழ்ச்சியாக இருக்க  வேண்டும் என்பதற்காக தான் இந்த திருமணத்தை நடத்தினேன் என்றார்.

Tags : bride ,party ,horse rider , father, son,bride ,800 people
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு:...