×

சீக்கியர் கலவரம் பற்றிய கருத்து பிட்ரோடா வெட்கப்பட வேண்டும்: பஞ்சாப்பில் ராகுல் காந்தி பேச்சு

கண்ணா: ‘‘கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு அவர் வெட்கப்பட வேண்டும்’’ என பஞ்சாபில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா. ராகுல் குடும்பத்தினருக்கு நெருக்கமான இவரிடம், சமீபத்தில் கடந்த 1984ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப்பின் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான  கலவரம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ‘அது நடந்து முடிந்த சம்பவம், அதனால் என்ன?’ என கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு பல தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ கட்சியினரும் இந்த கருத்து குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய  ராகுல் நேற்று சென்றார். அங்கு பதேகர் சாகிப் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அமர் சிங்கை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார். அப்போது ராகுல் பேசியதாவது: 1984ம் ஆண்டு சம்பவம் குறித்து சாம் பிட்ரோடா கூறிய கருத்து  முற்றிலும் தவறானது. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை நான் வெளிப்படையாக சொல்கிறேன். இதே கருத்தைதான் நான் அவரிடம் போனிலும் கூறினேன். அவரிடம் பேசும் போது, ‘பிட்ரோடா ஜி நீங்கள் சொன்னது முற்றிலும் தவறானது. இதற்காக நீங்கள் வெட்கப்பட ேவண்டும். நீங்கள் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்’ என  கூறினேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

Tags : Pitroda ,Sikh ,Punjab ,Rahul Gandhi , Sikh riots, Pitroda , ashamed, Rahul Gandhi
× RELATED சாம் பிட்ரோடாவின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்