பராகுவே கொடியை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா கணவர் வதேரா

மக்களவை தேர்தலில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா இருவரும் தங்களின் வீட்டருகே உள்ள லோதி சாலை  வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இந்த புகைப்படத்தை வதேரா தனது பேஸ்புக்கில் பதிவிட்டார். அப்போது, தனது புகைப்படத்துடன், இந்திய தேசியக் கொடி என நினைத்து பராகுவே நாட்டு தேசிய கொடியின் படத்தை தவறாக பதிவிட்டார்.

பராகுவே நாட்டு கொடியானது சிவப்பு, வெள்ளை, நீல நிற பட்டையை கொண்டது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்துவிட்டனர். ‘இந்திய தேசியக் கொடி கூடவா தெரியாது, இந்த லட்சணத்தில் அரசியலில் குதிக்கப் போவதாக கூறிக்  கொண்டிருக்கிறீர்கள்’ என வறுத்தெடுத்து விட்டனர். உடனே அந்த பதிவை அழித்து, சில நிமிடங்களில் மூவர்ண கொடியுடன் வதேரா மீண்டும் பதிவிட்டார்.

Related Stories:

>