×

கால்நடைகளுக்காக ஆலங்குளத்தில் குடிநீர் தொட்டி

ஆலங்குளம்: கொளுத்தும் கோடையை சமாளிக்க ஆலங்குளத்தில் கால்நடைகளுக்கு குடிநீர் தொட்டி வசதியை நெல்லை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அமைத்து கொடுத்துள்ளது.மண்டல இணை இயக்குநர் ஆறுமுகபெருமாள் அறிவுரைப்படி தென்காசி கோட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்களில் கால்நடைகள் பருகுவதற்கு குடிநீர் தொட்டி அமைக்கபட்டு  வருகின்றன. அவ்வாறு அமைக்கபட்ட தொட்டிகளில் முழுமையாக தண்ணீர் நிரப்பி கோடைகாலம் முழுவதும் கால்நடைகள் பருகவும், முறையாகப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே தென்காசி கோட்ட உதவி இயக்குநர் முருகையா, குடிநீர் தொட்டி இல்லாத கால்நடை மருந்தகங்களில் புதிய தொட்டிகள் அமைக்கும் வரையில் பெரிய பாத்திரங்களில் நீர் நிரப்பி அவற்றை கால்நடைகளுக்காக  பராமரிக்க அறிவுறுத்தியுள்ளார். கோடைக்காலங்களில் ஏற்படும் பசுந்தீவனத்திலிருந்து கால்நடைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கால்நடை மருந்தகங்களில் தாது உப்பு மாவுகள்  மற்றும் புரதச் சத்து குறைபாட்டை போக்க கால்நடை வளர்ப்போர் தங்கள் வீட்டிலேயே வளர்க்கும் வகையில் அசோலா தீவன பாசியும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதை கால்நடை வளர்ப்போர், சம்பந்தப்பட்ட கால்நடை  மருந்தகங்களை அணுகி பெற்றுக்கொள்ளுமாறும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Tags : Alangulam , Cattle, Alankulam, drinking water tank
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி