பிராவோ ஓவரில் கிரீஸைவிட்டு நகர்ந்த மும்பை அணி வீரர் போலார்டுக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்

ஹைதரபாத் : ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது பவுலருக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கிரீஸைவிட்டு நகர்ந்த மும்பை அணி வீரர் போலார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன் இறுதிப் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்.

அப்போது பேட்டிங் செய்த மும்பை அணி வீரர் போலார்ட் எதிர் கொண்ட கடைசி ஓவரை சென்னையின் பிராவோ வீசினார். அப்போது பிராவோ தொடர்ந்து 2 முறை பந்துகளை அகலமாக வீசினார். போலார்ட் கிரீஸில் சரியாக நிற்காத நிலையில், இரண்டு முறையில் அகலபந்துக்கான ரன்கள் வழங்கப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த போலார்ட் 3வது பந்தை பிராவோ வீச வந்த போது, கிரீஸை விட்டு விலகி இருந்தார். இதனை அடுத்து நடுவர்கள் அவரிடம் சென்று எச்சரித்தனர். போலார்டு தனது செயலின் மூலம் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதை அடுத்து அவருக்கு ஒரு போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 25% அபராதமாக விதிக்கப்பட்டது.

Related Stories:

>