×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்களும் வழக்கம்போல் இயங்கும்...

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து பெட்ரோல் நிலையங்களும், வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் என தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெட்ரோல் பங்க்குகள் செயல்படுகின்றன. இந்த பெட்ரோல் பங்க்குகளில், 90 சதவிகித பெட்ரோல் பங்க்குகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை நிறுவனங்கள் மூலம்தான் பெட்ரோல், டீசலைப் பெறுகின்றன.

பெட்ரோல், டீசலுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கவில்லை என்றால், மே 14-ம் தேதிக்குப் பிறகு, நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்குகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மே 14-ம் தேதிக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் செயல்படும் என்று தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.


Tags : Petrol stations ,Tamilnadu ,Puducherry , Petrol bunk ,runs on Sundays , Tamilnadu , Puducherry on Sundays ...
× RELATED வாழப்பாடியில் ரூ.16 லட்சம் பறிமுதல்..!!